புது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு லேசான காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதை அடுத்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
அரவிந்த் கேஜரிவாலுக்கு நீரிழிவு நோய் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறதா என்று ஒரு நாள் பார்க்கலாம் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் அரவிந்த் கேஜரிவாலுக்கு உடல் நலம் தேறவில்லை என்றால், நாளை அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.