மும்பை அருகே சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் சிக்கிய விவகாரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மராட்டிய மாநிலத்தின் மும்பை அருகே கடற்பகுதியில் நிறுத்தப்பட்ட சொகுசுக் கப்பல் ஒன்றில் நேற்று திடீரென போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். கப்பலில் போதை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் கலந்து கொண்ட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் போதைப் பார்ட்டி தொடர்பாக ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானிடம் (Aryan Khan) விசாரணை நடைபெற்று வருவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பார்ட்டி தொடர்பாகவே அவரிடம் விசாரணை நடைபெறுவதாகவும், வழக்குப்பதிவு, கைது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் போதைப் பார்ட்டி நடத்தியது தொடர்பாக எஃப்டிவி இந்தியாவின் (FTV India) நிர்வாக இயக்குனநரான, காசிஃப் கானிடம் விரைவில் விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே