தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச்சந்தையில் ஏற்றம்..!!

பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் தொடர்ந்து உச்சத்தினை தொட்டு வருகின்றன. குறிப்பாக நேற்று வர்த்தக நேர முடிவில் சுமார் 2,300 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டது. இதற்கிடையில் இன்று கிட்டதட்ட 1200 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.

இன்று காலை தொடக்கத்திலேயே ஏற்றத்தில் தொடங்கிய சந்தைகள், முடிவிலும் ஏற்றத்தில் முடிவடைந்தது.

குறிப்பாக சென்செக்ஸ் 1197.11 புள்ளிகள் அதிகரித்து, 49,797.72 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 366.65 புள்ளிகள் அதிகரித்து, 14,647.85 புள்ளிகள் ஆகவும் முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் 1727 பங்குகள் ஏற்றத்திலும், இதே 1165 பங்குகள் சரிவிலும், இதே 170 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் நிஃப்டி, பிஎஸ்இ குறியீடுகளில் அனைத்தும் பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது.

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் டாடா மோட்டார்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், எஸ்பிஐ, அல்ட்ராடெக் சிமெண்ட், யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்டிஎஃப்சி லைஃப், பஜாஜ் பின்செர்வ், ஹீரோ மோட்டோகார்ப், டைட்டன் நிறுவனம், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எஸ்பிஐ, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்டிஎஃப்சி வங்கி, லார்சன், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும்; இதே பஜாஜ் பின்செர்வ், டைட்டன் நிறுவனம், ஹெச்யுஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சர்வதேச சந்தைகள் இரண்டாவது நாளாக ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், அதன் எதிரொலியும் இந்திய சந்தையில் ஏற்றத்தில் காணப்படுகிறது.

கூடுதலாக பட்ஜெட் அறிவிப்புகளும் சந்தையில் எதிரொலித்துள்ளது.

இதனால் இந்திய சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக பலமான ஏற்றம் கண்டு வருகின்றது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே