பெரும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கின இந்திய பங்குச்சந்தைகள் – வர்த்தகம் நிறுத்தம்…

கொரானா பாதிப்பு எதிரொலியால் இந்தியப் பங்குச்சந்தைகளில் பத்து விழுக்காட்டுக்கு மேல் சரிவு ஏற்பட்டதால், அவற்றின் வணிகம் 45 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. 

உலக நாடுகளில் கொரானா பாதிப்பு, பெட்ரோலிய விலை வீழ்ச்சி, தொழில் வணிகத்துறைகளில் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு ஆகியவற்றால் கடந்த இரு வாரங்களாகப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் இன்றைய வணிகநேரத் தொடக்கத்திலேயே பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் மூவாயிரத்து 214 புள்ளிகள் சரிந்து 29 ஆயிரத்து 565 ஆக இருந்தது.

பின் ஓரளவு மீட்சியடைந்து மூவாயிரத்து 91 புள்ளிகள் சரிந்து 29 ஆயிரத்து 687 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 966 புள்ளிகள் சரிந்து எட்டாயிரத்து 624 ஆக இருந்தது.

இரண்டு பங்குச்சந்தைகளிலும் பத்து விழுக்காட்டுக்கு மேல் சரிவு ஏற்பட்டதால் அவற்றின் வணிகம் 45 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே