எதிர்க்கட்சிகள் மக்களவையில் அமளி; இரவு 7 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு..!!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நடத்திய அமளி காரணமாக மக்களவை இரவு 7 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டநிலையில் மக்ககளவை இன்று காலை கூடியதும், மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, மக்களவை மீண்டும் மாலை 5 மணிக்கு கூடியது.

மக்களவை கூடியதும் அமளியில் ஈடுபடத் தொடங்கியதால் இரவு 7 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே