வரும் 26-ம் தேதி நிகழும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என தமிழ்நாடு அறிவியல் மைய தலைவர் பால்வண்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பேட்டியளித்த அவர், மதுரை, புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நூறு சதவீத சூரிய கிரகணம் தெரியும் என கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 87 சதவீத கிரகணம் தெரியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதை வெறும் கண்களால் பார்த்தால் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக பால்வண்ணன் கூறினார்.
சூரிய கிரகணத்தை சிறியவர்கள் முதல் கர்ப்பிணிப் பெண்கள் வரை உரிய பாதுகாப்பு கண்ணாடிகளுடன் பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.