ஊரடங்கு உத்தரவு முடியும் வரை சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், ஏழை எளிய மக்களின் வசதிக்காக சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும், கடந்த 17-ம் தேதி வரை இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் உணவுக்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இது வேலையில்லாமல் உணவுக்காக திண்டாடி வரும் ஏழை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் உத்தரவின்பேரில் சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் மே 31 வரை மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
Related Tags :
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.