திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இட ஒதுக்கீடு பெற ஏதுவாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 3 ஆம் பாலினத்தவர்களான திருநம்பிகள்,திருநங்கைகளை சேர்க்க மத்திய சமூக நீதித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி,மத்திய சமூக நீதித்துறை ஓபிசி பட்டியலில் திருநங்கைகளை சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

கல்வி,வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீட்டின்கீழ் திருநங்கைகள் பயனடையும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து,இந்த அறிக்கையின் மீது மத்திய அரசு முடிவு எடுத்து அதற்கான ஒப்புதல் அளித்து,பின்னர் அதனை நாடாளுமன்றத்திற்குஅனுப்பி வைப்பார்கள்.நாடாளுமன்றத்தில் அது சட்ட திருத்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே