சென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல்

தமிழகம் முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் பெயர் மாற்றம், திருத்தம் உள்ளிட்டவைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பிரகாஷ் வெளியிட்டார்.

அதனை அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.

சென்னையில் மொத்தம் 38 லட்சத்து 88 ஆயிரத்து 673 வாக்காளர்கள் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 3 ஆயிரத்து 909 வாக்காளர்கள் இருப்பதாகவும்; குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 620 வாக்காளர்கள் இருப்பதாகவும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே