சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷிற்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.
2018-ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கும் 66-வது தேசிய திரைப்பட விருது விழா டெல்லியில் நடைபெற்றது.
இதில் குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இந்த விழாவில் அவர் பங்கேற்கவில்லை.
மேலும் மகாநதி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்ட கீர்த்தி சுரேஷ்-க்கு, வெங்கையா நாயுடு விருது வழங்கி கவுரவித்தார்.
அதேபோல சிறந்த தமிழ் படத்திற்கான விருது பாரம் படத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் சிறந்த படத்திற்கான விருது உரி ( தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் ) படத்திற்கும் வழங்கப்பட்டது.
மேலும் மலிவு விலை நாப்கினை உருவாக்கிய கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் பற்றிய பேட்மேன் படத்திற்கு சிறந்த சமூக படத்திற்கான விருது வழங்கப்பட்டது.
படத்தின் கதாநாயகனானான அக்ஷய் குமாருக்கு, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு விருதை வழங்கினார்.