முருங்கையின் ரகசியம்..!! அவ்வளவு மருத்துவம் உள்ளது முருங்கையில்..!!

உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக அமையும் முருங்கைக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

“முருங்கை நொறுங்க தின்னா 3000 வராது” இந்த பழமொழி அர்த்தம் என்னவென்றால் நாம் உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக மென்று நொறுங்க தின்றால் எந்த நோயும் வராது.

ஒரு சில தாவரங்களின் சில பகுதிகளில் மட்டும் மனிதர்கள் உணவாகப் பயன்படுத்த முடியும்.

ஆனால் ஒரு சில தாவரங்களில் அதன் காய், இலைகள், பிசின், பூக்கள் அனைத்துமே மருத்துவகுணம் வாய்ந்ததாக இருக்கும்.

அதன்படி ஒரு சிறப்பு வாய்ந்த வாய்ந்த மருத்துவ மூலிகை மரம் முருங்கை மரம் உள்ளது. அதன் இலைகள் முருங்கைக் கீரை என்று அழைக்கப்படுகிறது.

அதனை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். முருங்கைக்கீரை மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது. உடலில் கை மற்றும் கால் வலி வந்துபோகும். முருங்கைக் கீரையை மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் கைகால் மற்றும் உடம்பு வலிகள் நீங்கும்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கும். முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். பற்களுக்கு உறுதி அளிக்கும்.

உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய்ப்புண்கள் போன்றவை நீங்கும்.

உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும். இதனை சாப்பிட்டால் தலைமுடி அடர்த்தியாக வளரும். மேலும் தலை முடி உதிர்வது, முடி நரைப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும்.

முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து, அணைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்க உதவுகிறது.

இதனை தாய்மார்கள் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். சுவாசக்கோளாறு பிரச்சினைகள் நீங்கும்.

மேலும் முருங்கைக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் 3000 நோய்கள் வராது என்று முன்னோர்கள் கூறுவார்கள். முருங்கை நோய்கள் வராமல் தடுக்கக் கூடியது மட்டுமல்ல நோய்களை குணப்படுத்தவும் வல்ல சிறப்பு மருந்தாகும்.

எனவே உடலில் பாதம் முதல் உச்சந்தலை வரை உள்ள அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக பயன்படும் முருங்கைக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே