காஷ்மீரில் ஒன்பது குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்த இருமல் மருந்து தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் இருமல் மருந்து ஒன்றினை குடித்த 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குழந்தைகள் இறக்க காரணம் COLDBEST-PC என்ற இருமல் மருந்து என கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் கலக்கப்பட்ட ஒரு துணை வேதிப்பொருள் விஷத்தன்மை கூடியதாக ஆக்கியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்படும் இந்த மருந்துக்கு தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய அரசால் நேரடியாக தடை செய்யப்படாததால் ஆன்லைன் மூலம் விற்கப்படக் கூடிய அபாயம் உள்ளதாக விற்பனையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே