சரியான அளவில் “பிரா” பயன்படுத்தாவிட்டால் பாதிப்பு.. அளவை தெரிந்து கொள்வது எப்படி??

பெண்கள் பிரா வாங்கும்போது எதில் தவறு செய்கிறார்கள். எப்படி வாங்க வேண்டும் என்பதை வழிகாட்டுகிறது இந்தக் கட்டுரை.

தவறான பிரா வாங்கினால் ஏற்படும் பாதிப்புகள் :

பெண்கள் எந்த விஷயத்தில் வேண்டுமானாலும் சிக்கனமாக இருக்கலாம்.

ஆனால் உள்ளாடை வாங்கும்போது மட்டும் சிக்கனம் பார்க்காமல் பிராண்டாகவும், தரமானதாகவும் வாங்க வேண்டும்.

அதேபோல் தவறான அளவில் வாங்கினாலும் அது அசௌகரியத்தை உண்டாக்கும்.

அதேசமயம் அதன் ஷேப்பையும் மாற்றும். எதிரே பார்க்கும்போது தோற்றம் நன்றாக இருக்காது.

அதேபோல் தவறான பிரா அளவு தோள்பட்டை வலி, முதுகு வலிக்கு காரணமாக அமையும். இறுக்கமான எலாஸ்டிக் பிரா அணிந்தாலும் மார்பகங்களுக்குக் கீழ் கருப்பாக மாறும்.

எப்படி பிரா வாங்க வேண்டும்..?

மார்பக அளவை தெரிந்துகொள்ள இஞ்ச் டேப் பயன்படுத்தி சுற்றளவை எடுக்க வேண்டும். அதற்கு மார்பகங்களுக்குக் கீழ் இஞ்ச் டேப்பை வைத்து அளவு எடுக்க வேண்டும்.

இது 32,34, 36 என அதன் அளவு இரட்டை படை எண்களில் இருக்கும்.

அப்படி வரும் எண்ணுடன் ஐந்தை கூட்டிக்கொள்ள வேண்டும். ( உதாரணத்திற்கு 38 + 5 = 43 )

ஒருவேளை அளவு ஒற்றைப் படை எண்ணில் வந்தால் அதன் அடுத்த இரட்டை படை எண்ணை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு நீங்கள் ஐந்துடன் கூட்டிய எண் 43 என வந்தால் அதன் அடுத்த எண்ணான 44 அளவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தற்போது இதுதான் பிராவின் சுற்றளவு.

அடுத்ததாக கப் சைஸ் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது மார்பகங்களின் அளவு.

இந்த கப் சைஸ் என்பது எண்ணிக்கையில் அல்லாமல் எழுத்தாக A,B,C,D என வரும்.

இதற்கு இஞ்ச் டேப்பை மார்பகங்களின் மேல் வைத்து அளவு எடுக்க வேண்டும்.

அந்த அளவு 40 என வந்தால் அதை மார்பக சுற்றளவுடன் கழிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு கப் அளவு 40 – சுற்றளவு 44 கழித்தால் 4 வரும். இந்த நான்கு என்பது Dயைக் குறிக்கும். எனவே கப் அளவு D கப்.

தற்போது பிரா வாங்கும்போது சுற்றளவு மற்றும் கப் சைஸ் இரண்டையும் சேர்த்து கேட்க வேண்டும். அதாவது பிரா சைஸ் 44 கப் சைஸ் D என கேட்டு வாங்க வேண்டும்.

இப்படி உங்களின் மார்பக சுற்றளவு, மார்பக அளவு எவ்வளவு வருகிறது என இஞ்ச் டேப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளுங்கள்.

ஒருவேளை இஞ்ச் டேப் இல்லை என்றாலும் பிரா விற்கும் கடைகளில் இஞ்ச் டேப் வைத்திருப்பார்கள். உதவிக்குக் கேட்டால் கொடுப்பார்கள்.

அல்லது அருகில் உள்ள டெய்லர் கடையில் சென்றும் உங்கள் அளவை தெரிந்துகொண்டு, நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே