ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த மலைப்பாம்பு

பாம்பு என்றால் படமெடுக்கும் என்பார்கள். ஆனால் ஆஸ்திரலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் பாம்பு ஒன்று ஏடிஎம் மையத்தில் இருந்ததை கண்டு, பணம் எடுக்க வந்துள்ளதோ பாம்பு என்று மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

டயான் செல் என்ற பெண் லிஸ் மோரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் வங்கி ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அங்கு ஏடிஎம் இயந்திரத்தின் மீது வாயை பிளந்தபடி சீற்றத்துடன் பெரிய மலை பாம்பு ஒன்று இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பணம் எடுக்கும் முடிவை கைவிட்டு, அருகில் இருந்தவர்களிடம் தகவல் கூறியுள்ளார். பின்னர் பாம்பு பிடிப்பவர்களுக்கு விஷயம் சொல்லப்பட்டது. அவர்கள் வருவதற்குள் ஏடிஎம் மையத்தின் முன் கூடிய மக்கள், தங்களது மொபைலில் மலை பாம்பை படம் பிடிக்க துவங்கினர்.

தன்னை மக்கள் சூழ்ந்ததை பார்த்து மலைபாம்பு மேலும் சீற்றமடைந்து. அதற்குள் அவரவர் தங்களது சமூகவலைதள பக்கத்தில் சம்பவம் குறித்து போட்டோ மற்றும் வீடியோவுடன் பகிர்ந்தனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு பிடிப்பவர் அதனை பாதுகாப்பாக பிடித்து சென்றார். அதன் பின்னரே மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கிராமம் மற்றும் வன பகுதிகளில் மலைபாம்பை பார்ப்பது சாதாரணமானது. ஆனால் நகர் பகுதியில் பெரிய மலை பாம்பை கண்டதும் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்ததாக மக்கள் கூறினர்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே