#CoronaVaccine : ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை ஆய்வு செய்ய விருப்பம்: WHO அறிவிப்பு!!

உலகில் முதல் முறையாக கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்தது. இந்த நிலையில் தடுப்பூசியை ஆய்வு செய்ய உலக சுகாதார மையம் விருப்பம் தெரிவித்துள்ளது.

அதிபர் புதின் மகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு சோதனை வெற்றி பெற்றதாக விளாடிமிர் புதின் கூறியிருந்தார். மாஸ்கோவில் உள்ள ஹேமாலயா இன்ஸ்டிடியுட் மற்றும் ரஷ்ய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து சாதனை படைத்துள்ளது.

வரும் அக்டோபர் மாதம் முதல் நாட்டு மக்களுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ரஷ்யா கண்டுபிடித்துள்ள மருந்துக்கு ஸ்புட்னிக் வி என பெயரிடப்பட்டுள்ளது. இது சோவியத் யூனியன் முதல் முறையாக விண்வெளிக்கு அனுப்பிய விண்கலத்தின் பெயராகும்.

இந்த மருந்தை வாங்க இந்தியா, சவூதி அரேபியா, யூஏஇ, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட குறைந்தபட்சம் 20 நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை ஆய்வு செய்ய விரும்புவதாக உலகம் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

எப்படி தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது என்று உலக சுகாதார நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது. ஏற்கனவே 2000 பேருக்கு இந்த தடுப்பூசியை பரிசோதனை செய்து முடித்துள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளதை ரஷ்யா வரவேற்றுள்ளது.

WHO இதை தடுப்பூசியை ஏற்றுக்கொண்டால் உலகம் முழுவதும் இந்த தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே