உக்ரைனிடம் பயோ ஆயுதங்கள் இருப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டு..!!

உக்ரைன் கையில் பயங்கர பயோ ஆயுதங்கள் இருப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டி உள்ளது. அமெரிக்கா இதை மீண்டும் மறுத்துள்ளது.

ரஷ்ய உக்ரைன் போர் உச்சம் அடைந்து உள்ள நிலையில் உக்ரைன் படைகள் பயோ ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டி உள்ளது. ரஷ்ய எல்லையில் இருக்கும் உக்ரைன் பகுதிகளில் அமெரிக்கா ஆதரவுடன் பயோ ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக ரஷ்யா தொடர்ந்து புகார் வைத்து வருகிறது.

இந்த புகார் சர்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொடூரமான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த போரில் பயோ ஆயுதமும் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

வவ்வால்

முக்கியமாக வவ்வால் மூலம் வைரஸ்களை அனுப்ப உக்ரைன் – அமெரிக்கா இணைந்து திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டி உள்ளது. ஏற்கனவே ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்த விஷயத்தை ரஷ்யா எழுப்பிய நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் இதை பற்றி விவாதிக்க வேண்டும் என்று ரஷ்ய தரப்பு கோரிக்கை வைத்ததில்லை. இதையடுத்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பாக நேற்று ரஷ்யாவின் பிரதிநி வாசிலி பேசினார்.

என்ன சொன்னார்

உக்ரைன் நாட்டின் இந்த செயலால் எங்களுக்கு மட்டும் அல்ல. மொத்த ஐரோப்பாவிற்கு சிக்கல் உள்ளது. மொத்த ஐரோப்பாவிலும் இதனால் நோய்கள் கட்டுக்கடங்காமல் பரவும் ஆபத்து உள்ளது. உக்ரைனில் இருக்கும் பயோ ஏஜெண்ட் உள்ளது. எங்கள் நாட்டில் நோயை பரப்பும் விதமாக உக்ரைன் இப்படி செய்கிறது. ஆனால் இது ஐரோப்பா மொத்தத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மறுப்பு

இதனால் கட்டுக்கடங்காமல் வைரஸ் பரவும். அப்படி பரவினால் ரஷ்யாவில் மட்டும் பரவும் என்று கூற முடியாது. மொத்த ஐரோப்பாவும் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது. உக்ரைனை ஆதரிக்கும் நாடுகள் கூட பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே, அல்பேனியா, அயர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மறுத்துள்ளது.

ரஷ்யா பொய்

ரஷ்யா இதில் பொய் சொல்லி வருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலையே ரஷ்யா ஏமாற்ற பார்க்கிறது. பொய்யான தகவல்களை ரஷ்யா பரப்பி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தேவையற்ற கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களை மறைக்கும் விதமாக, மடைமாற்றம் விதமாக ரஷ்யா இந்த பொய்யான புகாரை கையில் எடுத்துள்ளது என்று இந்த நாடுகள் பதில் அளித்துள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே