மதுபானக் கடையை மூடக்கோரி ஒரு தரப்பும், திறக்கக்கோரி மற்றொரு தரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

ஈரோட்டில் மதுபான கடையை மூடக்கோரி ஒரு தரப்பும், திறக்கக்கோரி மற்றொரு தரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு திருநகர் காலனியில் இயங்கி வரும் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்களும், மற்றொரு தரப்பில் திறக்கக்கோரி குடிமக்கள்களும் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

திரு நகர் காலனியை பொறுத்தவரை குடியிருப்பு வீடுகள் நிறைந்த பகுதியில் தான் இந்த மதுக்கடையானது இயங்கி வருகிறது. இந்த அரசு மதுக்கடை இங்கு இருக்கின்ற பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியிருப்புகள் மட்டுமின்றி அருகில் பள்ளிக்கூடமும் இருப்பதால் இங்கு இருக்கின்ற மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒருமாதத்திற்கு முன்னதாக இந்த மதுக்கடை மூடப்பட்டு, தற்போது எந்த ஒரு முன் அறிவிப்பின்றி மதுபானக்கடை திறக்கப்பட்டதால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இந்த மதுப்பானக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் கடை திறந்ததும் உற்சாகத்துடன் வந்த மது பிரியர்கள் கடை வளாகத்தில் அமர்ந்து மதுபானக்கடையை நிரந்தரமாக தொடர்ந்து இதே பகுதியில் திறக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: இந்த மதுக்கடையால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது, குடித்துவிட்டு மதி தவறி நடக்கின்றனர். வயசு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதுகுறித்து மதுக்கடை பிரியர்கள் கூறியதாவது: 17 வருடமாக இந்த மதுக்கடை இங்கு இயங்கிக்கொண்டு வருகிறது, வேறொரு மதுக்கடைக்கு செல்ல வேண்டுமென்றால் 4.கி.மீ. செல்லவேண்டியிருக்கிறது. இந்த மதுக்கடையை சுற்றி வீடுகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த மதுக்கடையை மூடினால் உயிரிழந்து விடுவோம் என்று அதிர்ச்சியாக தெரிவிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து கடையின் விற்பனையானது தொடர்ந்து நடைபெற்று வரும் சூழ்நிலையில் , பொதுமக்களின் போராட்டமானது 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருவதால் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே