நெல்லை கண்ணனைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.கவினர் மெரினா அருகே போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதனையடுத்து, நெல்லை கண்ணன் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இந்தநிலையில் இன்று நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள காமராஜர் சாலையில் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, இல.கணசேன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனையடுத்து காவல்துறையினர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.கவினரைக் கைது செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே