டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் அடுத்தாண்டு (2021) மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை கருத்தில் கொண்டு, டிரைவிங் லைசென்ஸ், பதிவு சான்றிதழ்கள், பெர்மிட்கள் ஆகியவை செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 வரை செல்லும் என கருத வேண்டும்.பிப்.,2020 முதல் காலாவதியான சான்றிதழ்களுக்கு இது பொருந்தும்.

சமூக இடைவெளியை பின்பற்றும் இந்த நேரத்தில், இது பொது மக்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே