ஏழுமலையான் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி கோலாகலம்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று அதிகாலை திருக்குளத்தில் ஏழுமலையான் சக்கர ஸ்நானம் செய்யும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடையும் நிலையில் இன்று மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தை அடைந்தார்.

அவரை தொடர்ந்து சக்கரத்தாழ்வாரும் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மலையப்ப சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது.

பின்னர், தேவர்ஸ்தான அர்ச்சகர்கள் சக்கரத்தாழ்வாரை கோவில் திருக்குளத்திற்கு அழைத்துச் சென்று அவரை ஸ்நானம் செய்ய வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

அப்போது திருக்குளத்தின் நான்கு புறங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பங்கேற்று ஸ்வாமியை தரிசனம் செய்வார்கள்.

தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு தங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டிருந்த கருட கொடி இறக்கப்படுவதுடன் நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே