காந்தி நகர் கூவம் ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு!

ஆறுகள் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

சென்னையில் ஓடும் கூவம் நதியை சுத்தம் செய்யும் பொருட்டு நதிக்கரையின் ஓரத்தில் உள்ள குடும்பங்களை சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை அகற்றி வருகிறது.

இதற்காக இன்று காவல்துறையினருடன் சென்ற அதிகாரிகள் அப்பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி அப்புறப்படுத்தினர்.

முழுஆண்டுத் தேர்வுக்கு இன்னும் சில மாதமே உள்ளதால் வீடுகளை அகற்ற இன்னும் சில மாதம் அவகாசம் கேட்டு அப்பகுதியில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சிலரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் காவல்துறையினர் அவர்களைக் கடுமையாக தாக்கி இனிமேல் போராட்டம் நடத்தினால் அவ்வளவு தான் என சொல்லி அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு பிரிவு 75-ன் கீழ் வழக்குப் பதிவு செய்த பின்னர் அவர்களை விடுத்துள்ளனர்.

இதையடுத்து மாணவர்கள் நலன் கருதி சிறப்பு பேருந்து, பள்ளி இடமாறுதல் வசதி உள்ளிட்டவைகளை செய்துத்தர நடவடிக்கை எடுப்பதாக உயர் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே