குடும்பத்துடன் நடிகர் தனுஷ் பழனியில் வழிபாடு!

பழனி முருகன் கோவிலில் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்களுடன் சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் தனுஷ் நடிக்கும் சுருளி படப்பிடிப்பு பழனி அருகே உள்ள கோம்பைபட்டியில் நடந்து வருகிறது.

இதற்காக தனுஷ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவினர் அங்கு தங்கியுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்களுடன் பழனி முருகன் கோவிலுக்கு வந்தார்.

அவர் ரோப்கார் மூலம் மலைக்கோவில் சென்று, சாமி தரிசனம் செய்தார். இதற்கிடையே தனுஷ் வந்ததை அடுத்து கோவிலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். 

பின்னர் அவர் ரோப்கார் வழியே அடிவாரம் சென்று பழனி கோம்பைபட்டிக்கு சென்றார்.

தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜூம் பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே