தாதா சாஹேப் பால்கே விருது பெற்றார் அமிதாப் பச்சன்

நடிகர் அமிதாப்பச்சனுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.

திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

திரைத்துறை விருதுகள் வழங்கும்போது அமிதாப் பச்சன் காய்ச்சலால் அவதிப்பட்டதால் அன்றைக்கு கலந்துகொள்ளவில்லை.

இதையடுத்து இன்று நடந்த விழாவில் தாதா சாஹேப் பால்கே விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து அமிதாப் பச்சன் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பிரகாஷ் ஜவடேகர், அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த அமிதாப், திரைத்துறையில் உயரிய விருது பெறுவதை பெருமையாக கருதுகிறேன்; ரசிகர்களின் அபரிமிதமான ஆதரவால் இந்த இடத்தில் நிற்கிறேன் என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே