கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் ராஜகுருவாக இந்தியா : ஆளுநர் பன்வாரிலால் பெருமிதம்

கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் மற்ற நாடுகளுக்கு ராஜகுருவாக இந்தியா திகழ்வதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் பாரதிய வித்யா பவன் சார்பில் கலாச்சார திருவிழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கர்நாடக இசை உள்ளிட்டவற்றில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

அதன்பின்னர் பேசிய ஆளுநர், நம் வரலாற்றில் சென்னை நகரம் கலை மற்றும் கலாச்சாரத்தில் பெயர் பெற்றது என்று குறிப்பிட்டதுடன் அதில் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாகவும், ராஜகுருவாகவும் இந்தியா திகழ்வதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே