2-வது நாளாக நீடிக்கும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 24 மணி நேரத்தை கடந்து இன்று 2வது நாளாக நீடிக்கின்ற நிலையில், அதிமுக – திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.

இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 315 மையங்களிலும் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

24 மணி நேரத்தை தாண்டியும், இன்று 2வது நாளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

மொத்தம் 515 இடங்களை கொண்ட மாவட்ட கவுன்சிலர் பதவிகளில், இதுவரை வெளியான முடிவுகளில் அதிமுக 170 இடங்களிலும், திமுக 190 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஐந்தாயிரத்து 67 இடங்களை கொண்ட ஒன்றிய கவுன்சிலர்களுக்கான வாக்கு எண்ணிக்கையும், 2வது நாளாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில் அதிமுக ஆயிரத்து 576க்கும் மேற்பட்ட இடங்களிலும், திமுக ஆயிரத்து 912க்கும் அதிகமான இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஒன்றிய கவுன்சில் இடங்களில் இதுவரை 80 சதவீத முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஒட்டுமொத்தமாக இன்று பிற்பகலுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே