14 மாவட்டங்களில் திமுக முன்னிலை :
திண்டுக்கலில் 23 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 16 இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. 7 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
பெரம்பலூரில் உள்ள 8 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 7 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் மட்டும் அதிமுக ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
மதுரையில் உள்ள 23 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக 12 இடங்களை கைப்பற்றியுள்ளது. 10 இடங்களில் அதிமுகவும், ஒரு இடத்தில் சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.
நீலகிரியில் உள்ள 6 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் ஐந்து இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து நீலகிரி மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக.
16 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 9 இடங்களை வென்று சிவகங்கை மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக கூட்டணி. சிவகங்கையில் 7 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை அதிமுக கூட்டணி வென்றுள்ளது.
24 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 19 இடங்களை வென்று திருச்சி மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக கூட்டணி. திருச்சியில் 5 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை அதிமுக கூட்டணி வென்றுள்ளது.
14 இடங்களை வென்று கிருஷ்ணகிரி மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக. கிருஷ்ணகிரியில் 5 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை அதிமுக வென்றுள்ளது. கிருஷ்ணகிரியில் சுயேட்சை ஒரு இடத்தில் வெற்றி.
13 இடங்களை வென்று நாகை மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக.
18 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 14 இடங்களை வென்று திருவாரூர் மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக கூட்டணி. திருவாரூரில் 3 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை அதிமுக கூட்டணி வென்றுள்ளது.
22 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 13 இடங்களை வென்று புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக கூட்டணி. புதுக்கோட்டையில் 9 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை அதிமுக கூட்டணி வென்றுள்ளது.
34 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 23 இடங்களை வென்று திருவண்ணாமலை மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக கூட்டணி. திருவண்ணாமலையில் 10 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை அதிமுக கூட்டணி வென்றுள்ளது.
17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 10 இடங்களை வென்று ராமநாதபுரம் மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக கூட்டணி. ராமநாதபுரத்தில் 4 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை அதிமுக கூட்டணி வென்றுள்ளது.
12 மாவட்டங்களில் அதிமுக முன்னிலை :
ஈரோட்டில் உள்ள 19 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 14 இடங்களை அதிமுகவும், 5 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.
கன்னியாகுமரியில் உள்ள 11 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 7 இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது.
கரூரில் உள்ள 12 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 9 இடங்களை அதிமுகவும், 3 இடங்களை திமுகவும் வென்றுள்ளது.
கோவையில் மொத்தம் உள்ள 17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 13 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 4 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
சேலத்தில் உள்ள 29 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 15 இடங்களிலும், திமுக ஒரு இடத்திலும் வெற்றி.
தருமபுரியில் மொத்தம் உள்ள 18 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 14 இடங்களை அதிமுக கைப்பற்றியது. 4 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக வெற்றி.
ஈரோட்டில் மொத்தம் உள்ள 19 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 14 இடங்களில் அதிமுக வெற்றி. 5 இடங்களில் திமுக வெற்றி.
கன்னியாகுமரியில் உள்ள 11 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மொத்தம் உள்ள 12 இடங்களில் 9 இடங்களை அதிமுகவும், 3 இடங்களை திமுகவும் கைப்பற்றியுள்ளது.
தேனியில் உள்ள 10 இடங்களில் 8 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை அதிமுகவும், 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுகவும் கைப்பற்றியது.
அரியலூரில் உள்ள 12 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 11 இடங்களை அதிமுகவும், 1 இடத்தை திமுகவும் கைப்பற்றியுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள 17 இடங்களில் 12 இடங்களை அதிமுக கைப்பற்றியது. 5 இடங்களில் திமுக வெற்றி