நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்..!!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாத காலம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

நகர்ப்புற தேர்தல் நடத்துவது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், முன்பு நடைபெற்ற விசாரணையில் 7 மாதம் அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையம் கோரியிருந்தது.

இந்த நிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிபதிகள் பேசியது:

தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் கூறும் காரணங்கள் மிகவும் மோசமானதாக இருக்கிறது. அடுத்த 4 மாதத்திற்குள் தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே