நாட்டில் நல்லாட்சி வழங்கப்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்

நல்லாட்சி நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

தேசிய நல்லாட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, நல்லாட்சி நடைபெறும் மாநிலங்களின் பட்டியலை மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலானது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், விவசாயம், தொழில் அகியவையின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த வகையில் நல்லாட்சி நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்தல், பொது சுகாதாரத்துறை கட்டமைப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு, மக்களுக்கான நீதி, சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்திலும் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. 

சுகாதாரப்பிரிவில் 2-வது இடத்திலும், விவசாய வளர்ச்சியில் 9-வது இடத்திலும், மனிதவள மேம்பாட்டில் 5-வது இடத்தில் தமிழகம் உள்ளது.

மேலும், பொருளாதார நிர்வாகத்தில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளதாக மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை கூறியுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே