மே 4 முதல் பயணிகள், போக்குவரத்து ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியீடு!

மே 4 முதல் சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து பணியாளர்களும் முகக்கவசம் அணிந்து பணிக்கு வரவேண்டும் எனவும்;

மணிக்கு ஒருமுறை தங்களது கைகளை சோப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு முடிந்து மே 4 ஆம் தேதி முதல் அரசுப் பேருந்தில் ஏறும் பயணிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அனுமதிக்க கூடாது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே