தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல சுழற்சியின் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை  வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை  24 டிகிரி செல்சியசாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 2 சென்டி மீட்டர் மழையும், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே