சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வழங்கினார் காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தி

கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் தேசிய இளையோர் வார விழாவை முன்னிட்டு மகாத்மா காந்தி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சைக்கிள் போட்டி நடைபெற்றது.

வாங்கல் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து கணபதிபாளையம் வரை நடைபெற்ற இந்த சைக்கிள் போட்டியில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் தினேஷ்குமார் முதலாவதாகவும், காதர் மீரான் இரண்டாவதாகவும், அரவிந்த் மூன்றாவதாகவும் வெற்றிபெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு வாங்கல் காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தி கோப்பைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், வாங்கல் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்களும் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை மகாத்மா காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் மேற்கொண்டார்.

நமது செய்தியாளர் : மு.மணிகண்டன்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே