அசுரன் பிரிப்பவன் அல்ல, பிணைப்பவன் : இயக்குநர் பாரதிராஜா

அசுரன் பிரிப்பவன் அல்ல, பிணைப்பவன் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

அசுரன் படம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதி, சமயம், மொழி, இனம், நாடு போன்ற தற்சார்பு பற்றுகளிலிருந்து நீங்கியவர் இயக்குனர் வெற்றிமாறன் என்று கூறியுள்ளார்.

அதனால்தான் ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் துயரத்தை, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை, அவர்களுக்கு எழுச்சியையும், வலியையும், அவமானத்தையும் உள்வாங்கி வெற்றிமாறன் திரைப்படமாக எடுத்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் வரும் ஒரு வசனம் குறிப்பிட்ட ஒரு வகுப்பினரை காயப்படுத்தி இருப்பதாக கருத்துக்கள் வெளி வந்ததாக இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். பின்னர், அந்த வசனம் நீக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.

அசுரனின் நோக்கம் தமிழக மக்களில் எவரையும் புண்படுத்துவது அல்ல, தமிழக மக்களை நாம் என்ற ஓர் உணர்ச்சிக்கும் பண்படுத்துவதாகும் என்று தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் எவராவது புண்பட்டிருந்தால் வெற்றிமாறனின் சார்பாக தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தனது வருத்தத்தை தெரிவித்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, கசப்பை மறந்துவிட்டு அசுரன் படத்தை பாருங்கள் எனவும் இயக்குநர் பாரதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே