பட்டினப்பாக்கத்தில் அவரது வீடு அமைந்துள்ள வீதியில் பூம் பூம் மாட்டுக்காரர் சென்று கொண்டிருந்தார். இதைக் கண்ட அமைச்சர் ஜெயக்குமார், வீட்டை விட்டு வெளியில் சென்று பூம் பூம் மாட்டிடம் ஆசி பெற்றார்.
பூம்பூம் மாட்டிடம் அமைச்சர் ஜெயக்குமார் ஆசிர்வாதம் வாங்கும் வீடியோ இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவை வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், நமது பண்பாட்டுக் கூறுகளை பாரம்பரியத்தை கேலியாகப் பார்க்கும் மனோபாவம் நிறைய பேரிடம் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு பூம் பூம் மாட்டிடம் ஆசி பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.
கீழடிக்காக பெருமைப்படும் வேளையில் பூம்பூம் மாட்டுக்காரர்களை மறந்துவிடக் கூடாது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.