சென்னை போயஸ் தோட்டத்தில் சசிகலா புதிதாகக் கட்டிவரும் வீட்டில் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அந்த கட்டடப் பகுதியை முடக்கியிருப்பதாக வருமான வரித்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் சிறையில் இருந்து விடுதலையானதும், தங்குவதற்காக, போயஸ் தோட்டத்தில் புதிதாக சசிகலா ஒரு வீட்டைக் கட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சசிகலாவுக்கு சொந்தமான ரூ. 300 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித் துறை முடக்கி நடவடிக்கை எடுத்தது.

பினாமி சொத்துப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில், போயஸ் தோட்டத்தில் கட்டப்பட்டு வந்த வீட்டை வருமான வரித்துறை முடக்கியிருப்பதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே