இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாவலனாக இருக்கும் கட்சி அதிமுக தான் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஹுசைன் ஜிந்தா ஹை என்ற சர்வதேச மாநாட்டிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் வந்திருந்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம், இஸ்லாமிய மக்களுக்கு நிறைய நலத் திட்டங்களை கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார்.
மேலும் சிறுபான்மை நலவாரியம், அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.