நாட்டிலேயே அதிகம் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையில் தமிழகம் 2வது இடம்

இந்தியா முழுவதும் 2019 ஆம் ஆண்டு தற்கொலை செய்து இறந்தவர்களின் பட்டியலை தேசிய குற்றவியல் காப்பகம் வெளியிட்டுள்ளது.

தேசிய குற்றவியல் காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி,

இந்தியா முழுவதும் 2019 ஆம் ஆண்டு 1,39,123 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் 50 சதவீத தற்கொலைகள் 5 மாநிலங்களில் நடந்துள்ளது.

மாகாராஷ்டிர முதலிடத்திலும் (18,916), தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது.

2019 ஆம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் 12,665 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மேலும், குடும்பமாக தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் தற்கொலை அதிகம் நடக்கும் நகரங்களில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. 

2019 ஆம் ஆண்டில் மட்டும் சென்னையில் 2461 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்தாண்டில் மட்டும் 10,281 விவசாயிகள் உள்பட 42,480 கூலித்தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மேலும் தற்கொலை செய்து கொள்பவர்களில் 15 சதவீதம் பேர் வீட்டில் இருக்கும் பெண்கள் என கூறியுள்ளனர்.

இந்திய அளவில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே