அதிதீவிர புயலாக மாறியுள்ள மஹா புயல்

அரபிக் கடலில் உள்ள மஹா புயலானது அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் புதன்கிழமை குஜராத் அருகே கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மஹா தீவிர புயலானது தொடர்ந்து  மேற்கு நோக்கி நகர்ந்து வந்த நிலையில், திசையில் மாற்றமடைந்து வடகிழக்காக குஜராத்தை நோக்கி நகர்கிறது.

இந்த புயல் இந்திய துணை கண்ட பகுதியை விட்டு  நகர்ந்து செல்லும் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்த்த நிலையில் திசையில் மாற்றம் பெற்று, குஜராத் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே