50 அடி ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுமி: மீட்கும் பணி தீவிரம்

ஹரியான மாநிலத்தில் 50 அடி ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுமி தவறி விழுந்தார்.

கர்னல் மாவட்டத்தில் இருக்கும் ஹர்சிங்புரா கிராமத்தில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று இருக்கும் தீயணைப்பு படையினர் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆழ்துளை கிணற்றின் அருகே பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் மிகப் பெரிய பள்ளம் தோண்டி சிறுமியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் சிறுமிக்கு தொடர்ந்து ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது. மீட்கப்பட்டதுடன் சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினரும் தயாராக உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே