ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை கனமழை..!!

மன்னார் வளைகுடா அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலாக இருந்த புரெவி வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இந்நிலையில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக வலுவிழந்ததையடுத்து அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே