சாத்தான்குளம் அருகே அமைந்துள்ள வடலிவிளையில் உள்ள காட்டுப்பகுதியில் 7வயது சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கல்விளை இந்திராநகரை சேர்ந்த சேகர் என்பவருடைய மகள் 7வயது சிறுமி. இந்த சிறுமி இன்று காலை முதல் காணாமல் போன நிலையில் உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்நிலையில் மதியம் 1 மணி அளவில் வடலிவிளையில் உள்ள இசக்கி அம்மன் கோவில் அருகே உள்ள ஓடை பகுதியின் பாலத்திற்கு அடியில் ஒரு குழந்தையில் உடலை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையின் உடல் மீட்கப்பட்டு, நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் சிறுமியின் உதடுகளில் ரத்த காயங்கள் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தண்ணீர் டிரம்மில் சிறுமியில் உடல் இருந்ததால் சிறுமி கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் புதுக்கோட்டையில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்டார்.
மேலும் சமீபத்தில் திருச்சி அதவத்தூரில் 9 ம் வகுப்பு மாணவி எரித்து கொல்லப்பட்டார்.
இதனால் தொடர்ச்சியாக பெண் குழந்தைகளுக்கு நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்ற கோரிக்கை வழுத்து வருகிறது.