நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் செப்டம்பர் 14ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. பாராளுமன்ற அலுவல்களுக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி இதற்கான பரிந்துரையை அளித்ததாக கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க சட்டசபை, நாடாளுமன்ற கூட்டங்கள் நடக்காமல் தள்ளி போய் வருகிறது.
கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் சட்டசபை கூட்டங்கள் நடந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் செப்டம்பர் 14ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது.
இந்த கூட்டத்தொடர் அக்டோபர் 1ம் தேதி வரை நடக்கும் என்று கூறப்படுகிறது. மொத்தம் 18 நாட்கள் இந்த கூட்டம் நடக்கும் என்கிறார்கள்.
கொரோனா பாதிப்பு, சோதனை, சமூக இடைவெளி உள்ளிட்ட விஷயங்களை கருத்தில் கொண்டு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ய இருக்கிறார்கள்.
அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாராளுமன்ற அலுவல்களுக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி இதற்கான பரிந்துரையை அளித்ததாக கூறப்படுகிறது.
ராஜ்யசபா சபாநாயகர் வெங்கையா நாயுடு மற்றும் லோக்சபா சபாநாயகர் ஓபி பிர்லா ஆகிய இருவரிடமும் அமைச்சரவை அதிகாரிகள், செயலாளர்கள் இது தொடர்பாக ஆலோசனை செய்துள்ளனர்.
சமூக இடைவெளியுடன் இருக்கைகளுக்கு இடையே இடம் விட்டு அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் அமைச்சர்கள், எம்பிக்களின் இடம் இந்த கூட்டத்தொடரில் மாற்றப்பட வாய்ப்புள்ளது. பிரதமர் மோடிக்கு அருகே யாரும் அமர வாய்ப்பு இல்லை.
இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.