உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இன்னும் 2 வாரங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை 2வது முறையாக வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குச்சாவடி இறுதி செய்தல், தேர்தலுக்கு தேவையான பொருட்களை தாயார் நிலையில் வைத்தல், தேர்தல் அலுவலர்கள் நியமனம் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.