கள்ளக்காதலில் புதுவகை : மணமகனின் தந்தை மணப்பெண்ணின் தாயுடன் ஓட்டம்…

குஜராத் மாநிலம் சூரத்தில் மாப்பிள்ளையின் தந்தையும் மணப்பெண்ணின் தாயும் ஓடிப்போனதால் திருமணம் நிறுத்தப்பட்டது.

அடுத்த மாதம் திருமணத்துக்கு நாள் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில் மகிழ்ச்சியுடன் ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்த இரு வீட்டாரும் அவர்களின் விபரீத உறவை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன் மாப்பிள்ளையின் தந்தையும், மணப்பெண்ணின் தாயும் அவரவரவர் வீடுகளில் இருந்து காணாமல் போன நிலையில் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவரின் நெருங்கிய நண்பர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கும் சிறுவயதில் இருந்தே நெருக்கமான உறவு இருந்ததும் அவர்கள் இருவரும் ஓடிப் போனதும் தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே