டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 40ஆக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்

மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட பணிகளுக்கான டின்பிஎஸ்சியின் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு 37 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிப்பதாக குறிப்பிட்டதுடன்; தமிழகத்தை காட்டிலும் பிற மாநிலங்களில் குரூப்-1 தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 53 வரை உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

அதனை கருத்தில் கொண்டு குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 35 ஆகவும், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 40 ஆகவும் உயர்த்த வேண்டுமென அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே