அதிக அதிர்வுகளை ஏற்படுத்தும் மேளங்களுக்கு தடை விதித்ததால் குலசேகரப்பட்டினத்தில் பக்தர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அதிக ஒலி எழுப்பும் வாத்தியங்களை இசைக்க கூடாது எனவும் கத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு வரக் கூடாது எனவும் திருவிழாவுக்கு முன்னதாகவே போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.
ஆனால் இந்த கட்டுப்பாடுகளையும் மீறி சிலர் அதிக சத்தம் கொண்ட வாக்கியங்களை இசைத்தனர்.
அவர்களை தடுத்த போது காவலர்களை மோசமாக திட்டிய பக்தர்கள் சிலர், அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. எச்சரிக்கையை மீறிய தசரா குழுவினர், பின்னர் கோயில் வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.