ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறு வாக்குப்பதிவு தொடர்பான வழக்கில் இன்பத் துரையாக இருக்கும் தாம் பேரின்ப துறையாக வெளியே வருவேன் என்று அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராதாபுரம் தொகுதி மறு வாக்குப்பதிவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது ஏன் என்று விளக்கம் அளித்தார்.
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தபால் ஓட்டுகளில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சான்றொப்பம் அளித்தது செல்லுபடி ஆகாது என்ற அடிப்படையில் வழக்கு தொடர்ந்ததாக கூறினார்.
தம்மை போல கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு வழக்கு இருப்பதாக குறிப்பிட்ட இன்பதுரை, தமக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், உயர்நீதிமன்றம் தமது வாதத்தை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் தான் உச்சநீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும் இன்பதுரை விளக்கம் அளித்தார்.