திருப்பதியில் தீபாவளியையொட்டி ஆஸ்தான நிகழ்ச்சி

தீபாவளி தினத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சம்பிரதாய முறைப்படி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற்றது.

தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் மலையப்ப சுவாமி ஏழுமலையான் கோவிலில் உள்ள மணிமண்டபத்தில் சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளினார்.

சேனை முதல்வன் என்று கூறப்படும் ஏழுமலையானின் சேனாதிபதி தனி பல்லக்கில் மணிமண்டபத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து உற்சவர்களுக்கும் சேனாதிபதிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு நெய்வேதியம் சமர்ப்பணம் செய்யப்பட்டது.

தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் இன்று நடைபெற வேண்டிய கல்யாண உற்சவம், வசந்த உற்சவம், கட்டண பிரமோற்சவம் ஆகிய கட்டண சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே