மீனாட்சி அம்மன் கோவிலில் இலவச லட்டு பிரசாதம் திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது. இதை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று முதல் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு சொக்கநாதரை தரிசிக்கச் செல்லும் வழியில் முக்குருணி விநாயகர் சன்னதி அருகே இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும்.

இந்த லட்டு 30 கிராம் எடையுள்ள அளவுக்கு இருக்கும் என கூறப்படுகிறது.

கோயில் நடை திறந்தது முதல் இரவு அடைக்கப்படும் வரை லட்டு பிரசாதம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்டு தயாரிப்பதற்காக மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு ஆடி வீதியில் தனி அறை அமைக்கப்பட்டு இயந்திரங்கள் மூலம் லட்டு தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

ஒரு மணி நேரத்தில் 2 ஆயிரத்து 400 முதல் 3 ஆயிரம் லட்டுகள் வரை தயார் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்களின் வருகையைப் பொறுத்து தினமும் 20 ஆயிரம் லட்டுகள் தயாரிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே