மோடிக்கு தொடர்ந்து அனுமதி மறுப்பு

பாகிஸ்தான் வான்வெளியை பிரதமர் மோடி பயன்படுத்த அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்த நிலையில் இது குறித்து ஐ நா வின் சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பிடம் இந்தியா புகார் அளித்துள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது பிரிவை நீக்கப்பட்டதில் இருந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் ஐநா சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற பிரதமர் மோதிக்கு தங்களது நாட்டு வான்வெளியை பயன்படுத்த அனுமதி மறுத்தது.

இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி சவுதி அரேபியா செல்வதற்கு வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் மீண்டும் அனுமதி மறுத்துள்ளது.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் இப்பிரச்சினையில் பாகிஸ்தான் விதிகளை மீறியதாக சர்வதேச விமான போக்குவரத்துறையிடம் இந்தியா புகார் அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே