திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி உள்ள சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஐந்து முப்பது மணிக்கு சுர்ஜித் குழிக்குள் விழுந்த நிலையில், அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பலகட்ட மீட்பு முயற்சிகள் பயன் அளிக்காமல் போயின.
அத்தோடு 30அடி ஆழத்தில் இருந்த குழந்தை சுர்ஜித் 72 அடிக்கும் அதிகமான தூரத்திற்கு சென்று விட்டான். அதனால் துளையிடம் அதி நவீன ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு இரண்டு மீட்டர் தூரத்தில் நேற்று காலை முதல் குழி தோண்டும் பணி நடைபெற்றது.
நடுக்காட்டுப்பட்டியில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டார்.
சுர்ஜித்தின் பெற்றோரை சந்தித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் குழந்தையை எப்படியும் மீட்டு விடலாம் என அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டினார்.
இதற்கிடையில் நள்ளிரவு 12 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ரிக் இயந்திரம் துளையிடும் பணியை தொடங்கியது.
மணிக்கு 10அடி ஆழத்திற்கு துளையிடும் என எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது ரிக் இயந்திரமும் பாறைகள் உள்ள பகுதி என்பதால் பணியில் தொய்வு ஏற்பட்டது.